வீடு வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை ஏற்று, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினையும், காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரை ஊராட்சியில் (09.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் வீடு வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை ஏற்று கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான முதல் தவணைத்தொகை ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டார்.
கலைஞர் கனவு இல்லம் திட்டமானது 2030 ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2025 க்குள் தமிழகத்தில் 1 இலட்சம் குடிசையில்லா வீடுகள் ஏற்படுத்துவதற்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு வீட்டுவசதி அலகிற்கும் தலா ரூ.3.50 இலட்சம் வீதம் நான்கு தவணைத் தொகைகளாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-2025 ஆம் ஆண்டில் 11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025-2026 - ஆம் ஆண்டில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 357 வீடுகளும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 243 வீடுகளும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 277 வீடுகளும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 124 வீடுகளும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 321 வீடுகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 214 வீடுகளும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 190 வீடுகளும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 164 வீடுகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 48 வீடுகளும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 96 வீடுகளும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 200 வீடுகளும் என மொத்தம் 2234 வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது, அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரை ஊராட்சியில் வீடு வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை ஏற்று கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான முதல் தவணைத்தொகை ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, இத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.இந்நேர்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply