அவல் வெஜிடபிள் கொழுக்கட்டை.
தேவையான பொருட்கள் -
1கப் தின் அவல்,1/4 கப் கேரட் நறுக்கியது, 1/4 கப் பீன்ஸ் நறுக்கியது
1/4 கப் பச்சை பட்டாணி, 1/4 கப் தேங்காய் துருவல், 3 பச்சை மிளகாய்,
1 பெரிய வெங்காயம்,1/2 கப் தண்ணீர், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,
1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்,1/4 டீஸ்பூன் கடுகு,1/2 டீஸ்பூன் உளுந்துபருப்பு, 1டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு, மல்லி இலை,
கறிவேப்பிலை,தேவையான அளவு உப்பு
செய்முறை -
கொழுக்கட்டை செய்ய தேவையான காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வாணலியை ஸ்டவ்வில்
வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்
தயாராக வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும். அவல் எடுத்து தண்ணீரில் சேர்த்து அலசி எடுத்து எடுக்கவும்.
பாதி வெந்தவுடன் அவலை காய்கறிகளுடன் சேர்த்து நன்கு கலந்து,உப்பு தேங்காய் துருவல்.மஞ்சள் தூள் சேர்த்து,கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இரண்டு நிமிடங்கள் கலந்து விடவும்.
பின்னர் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்.அதன் பின் எடுத்து கொழுக்கட்டைகளை பிடித்து ஒரு ஸ்டீமர் தட்டில் வைக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் கொழுக்கட்டை வைத்துள்ள தட்டை வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
இப்போது மிகவும் சுவையான, சத்தான, மிருதுவான வெஜிடபிள் அவல் கொழுக்கட்டை தயார்.
0
Leave a Reply