பேபிகான் குடமிளகாய் குருமா.
தேவையான பொருட்கள்:
2 பெரிய வெங்காயம்,2தக்காளி,1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்,1ஸ்பூன் மிளகாய் தூள்,4 சில் தேங்காய்,10 முந்திரி பருப்பு,
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்,2 குடமிளகாய்சிறிதளவுமல்லி இலை,1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் எடுத்து வைக்கவும்.வெங்காயம் குடமிளகாய்,பேபி கார்ன் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் பேபிகார்ன் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
தண்ணிரில் முந்தரிபருப்பை 5நிமிடம் ஊற வைக்கவும்.ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.ஊற வைத்தமுந்தரி பருப்பு அரைத்து கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ,அதில் வெங்காயம் சேர்த்து நன்றாகவதங்கியதும் ,அதில் தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ,பச்சை வாடை போகும் வரை
வதக்கவும்.
அதில் மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதங்கியதும்,நறுக்கியகுடமிளகாய் பேபி கார்ன் சேர்த்து ,நன்றாக வதங்கியதும், அதில் அரைத்த தேங்காய் விழுது,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.இப்போது சுவையான பேபி கார்ன் குடமிளகாய் குருமா தயார்.
0
Leave a Reply