பாலக் முறுக்கு.
தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை - 1 கட்டு (சுத்தம் செய்தது),
அரிசி மாவு - 1 கப்,
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்,
வெண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
எள்/சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (தேவைக்கேற்ப),
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை:
கீரையை கழுவிசிறிது தண்ணீரில் 2 நிமிடம் வேகவைத்து அல்லது பச்சையாக அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,கடலை மாவு,கீரை விழுது,வெண்ணெய்,எள்,மிளகாய் தூள்,பெருங்காயம்,மற்றும் உப்பு சேர்த்து,தேவையான அளவு தண்ணீர் தெளித்து மென்மையான முறுக்கு மாவு பதத்திற்குபிசையவும்.முறுக்கு அச்சில் (ஸ்டார் வடிவம்) மாவை போட்டுசூடான எண்ணெயில் முறுக்காக பிழிந்து விடவும்.மிதமான தீயில் வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால் சுவையான கீரை முறுக்கு தயார். கீரையை விரும்பாத குழந்தைகளுக்கு இது சிறந்தது .
0
Leave a Reply