25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பேபி கார்ன் மசாலா கிரேவி (Baby Corn Masala Gravy)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பேபி கார்ன் மசாலா கிரேவி (Baby Corn Masala Gravy)

தேவையான பொருட்கள் -
பேபி கார்ன் - 12 முதல் 15 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது அல்லது விழுது)
தக்காளி - 2 (அரைத்தது அல்லது கூழ்)
இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2

முந்திரி விழுது - 1 ஸ்பூன் (அல்லது 4-5 முந்திரி பருப்பு)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 3/4 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கசூரி மேத்தி (Kasuri Methi) - 1 ஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை - 
பேபி கார்ன்களை நன்கு, கொதிக்கும் நீரில் லேசாக உப்பு சேர்த்து 60 முதல் 70 சதவீதம்வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சீரகம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம்மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அதன்பிறகு அரைத்த தக்காளி கூழ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்புமஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது முந்திரி விழுதுமற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.இப்போது வேகவைத்துள்ள பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைத்துவேகவிடவும்.
கடைசியாக கரம் மசாலா தூள், கசூரி மேத்தி மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைதூவி இறக்கவும். சுவையான பேபி கார்ன் மசாலா கிரேவி தயார்!சப்பாத்தி, ரொட்டி, நான் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சுவையான ஒரு சைட் டிஷ் ஆகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News