25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


வாழைத்தண்டு கோலா உருண்டை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாழைத்தண்டு கோலா உருண்டை

தேவையான பொருட்கள்:
1 கப்வாழைத்தண்டு,
3 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு,
1 துண்டு பட்டை,
2கிராம்பு,
2 ஏலக்காய்,
2 வரமிளகாய்,
2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்,
1 டேபிள்ஸ்பூன் சோம்பு,
5 பல் பூண்டு,
1 கொத்து கருவேப்பிலை,
1 பெரிய வெங்காயம்,
தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்,
தேவையான அளவு உப்பு.
 
செய்முறை 
முதலில் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை ஒரு குக்கரில் சேர்த்து 2 விசில்விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து பொன்நிறம் வரும்வரை வறுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி பண்ணி எடுத்துக் கொள்ளவும்..

பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு,ஏலக்காய் ,சோம்பு, சேர்த்து ,பிறகு பூண்டு ,கருவேப்பிலை ,வெங்காயம் ,சேர்த்து,வர மிளகாய் ,தேங்காய் துருவல் ,சேர்த்து நன்றாக இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
வதக்கி வைத்த மசாலாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்துஅதனுடன் வேக வைத்த வாழைத்தண்டு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்த கலவையில் பொடி செய்த கடலைப்பருப்பை சேர்த்து, பிசைந்துக்கொள்ளவும். பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி,எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்த கோலா உருண்டைகளை சேர்த்துபொன்னிறம் வரும் வரை பொரித்தெடுக்கவும்.

சுவையான வாழைத்தண்டு கோலா உருண்டை தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News