கருப்பு சுண்டல்,பச்சை பயிறு தோசை
கருப்பு சுண்டல் - 1 கப்,பச்சை பயிறு - 1கப் எடுத்து ஊற வைத்து விடுங்கள். இரவு தண்ணீரை வடித்து, ஒரு கட்டன் துணியில் போட்டு முடிந்து. ஒரு டப்பாவில் போட்டு மூடி வையுங்கள்.
காலையில் திறந்துபார்த்தால் முளைத்திருக்கும். அதை எடுத்து மிக்சியில் சேர்ந்து மாவாக அரைத்து கொள்ளுங்கள். ஒரு பவுலில் மாவை போட்டு, நறுக்கிய வெங்காயம்- துருவிய கேரட்-1, சீரகம் 1 ஸ்பூன், மிளகாய்-1, கறிவேப்பிலை - 1கொத்து, மிளகு தூள் 1/2 ஸ்பூன்,உப்பு இஞ்சி-1 துண்டு நறுக்கியது. கொத்தமல்லி - 1 கைப்பிடி சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தடவி குட்டி குட்டியாக சுட்டு எடுக்கலாம் தேங்காய் சடனி, பூண்டு சட்னியோடு சாப்பிட சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாரம் ஒரு முறை இதை சாப்பிடுங்க.
0
Leave a Reply