மலை சிகரத்தில் அருளும் பைரவர்
உ த்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் என்ற இடத்தில் அமைந்துள்ளது.கேதாரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்திற்கு சாலை வழி யாக செல்ல முடியாது. கவுரி குண்ட் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மலை மீது ஏறித்தான் செல்ல வேண்டும். இங்கிருந்தும் சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக் கிறது,புகுர்ந்த் பைரவர் கோவில், இந்த இடத்தில் சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கிய மானவராக கருதப்படும். பைர வர் வழிபடப்படுகிறார். மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், பைரவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பைரவருக்கு மேற்கூரை கிடையாது. திறந்தவெளியில்தான் இவர் வீற்றிருக்கிறார்.
கேதார்நாத் கோவிலுக்கு தெற்கே மலை உச்சியில் அமைந் துள்ள இந்த கோவிலை, கேதார் நாத் கோவிலில் இருந்து பார்க்க முடியும். அதே போல் மலை உச்சியில் இருந்து கேதார்நாத் ஆலய மும் அழகாகத் தெரியும்.கேதாரீஸ்வரர் கேதார்நாத் கோவிலில் காலையில் நடை திறந்து வழிபாடு செய்யப்படுவ தற்கு முன்பாகவே, மலை உச்சி யில் உள்ள இந்த பைரவர் கோவி லுக்கு பூஜைகள் செய்யப்படு கின்றன. ஒருவர் கேதார்நாத் ஆலயத்திற்கு பயணம் சென்றால், அவர் புகுந்த மலை மீதுள்ள பைரவரை வழிபாடு செய்யாமல், அந்த பயணமும், தரிசனமும் முழுமை பெறாது என்கிறார்கள்.
0
Leave a Reply