சீறிப்பாய்ந்த சீனாவின் மேக்லெவ் ரயில்: 5.3 வினாடிகளில் 800 கி.மீ. வேகம்.
சீனா தனது அதிவேக மேக்லெவ் (Maglev) ரயிலின் சோதனையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. சுமார் 1 கி.மீ. நீளமுள்ள சோதனைப் பாதையில் இயக்கப்பட்ட இந்த ரயில், வெறும் 5.3 வினாடிகளில் மணிக்கு 800 கி.மீ. வேகத்தை எட்டி சாதனை படைத்தது.
மின்காந்த விசையின் உதவியுடன் தண்டவாளத்தைத் தொடாமல், சற்று மேலே மிதந்தபடி பயணிக்கும் தொழில்நுட்பத்தை இந்த ரயில் கொண்டுள்ளது.
மேலும், சோதனையின்போது அதிவேகத்தை எட்டிய ரயில், மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பத்தின் மூலம் சுமார் 200 மீட்டர் தூரத்திற்குள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
அதிவேக ரயில் போக்குவரத்துத் தொழில்நுட்பத்தில் சீனாவின் இந்தச் சோதனை முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
0
Leave a Reply