25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


Ghiblify மோகத்தால் கதறிய சாட்ஜிபிடி CEO!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

Ghiblify மோகத்தால் கதறிய சாட்ஜிபிடி CEO!

சமீபத்தில் சாட்ஜிபிடி அறிமுகம் செய்தGhiblify ட்ரெண்ட் ஆகியுள்ள நிலையில் இதனால் தற்போது சாட்ஜிபிடியே சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி ஏஐ உலக அளவில் பலரால் பயன்படுத்தப்படும் ஏஐ மென்பொருளாக உள்ளது. பலரும் கோப்புகள் தயாரிப்பு, ஆவணங்கள் சரிபார்த்தல், கோடிங் என பல பயன்பாடுகளுக்கு சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர்.

 சமீபத்தில் சாட்ஜிபிடிGhiblify என்ற புதிய போட்டோ பில்டர் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. ஜப்பானின் புகழ்பெற்ற அனிமே பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிப்ளியின் அனிமே திரைப்படங்கள் மிகவும் புகழ்பெற்றவை. பயனாளர்கள் தங்கள் போட்டோக்களை சாட்ஜிபிடியில் பதிவேற்றி Ghiblify செய்து கேட்டால், அது அந்த அனிமே பாணியிலேயே போட்டோக்களை மாற்றி தருகிறது.

இது உலகளாவிய ட்ரெண்டிங் ஆனதால் தற்போது ஏராளமான இணையவாசிகள் சாட்ஜிபிடிக்குள் புகுந்து தங்கள் புகைப்படங்களை கிப்ளிஃபை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் சாட்ஜிபிடியின் மெயின் சர்வரே ஆட்டம் கண்டுள்ளது. ஏராளமான பயனாளர்கள் இந்த ஃபில்டரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால் சாட்ஜிபிடியின் செயல் வேகம் குறைந்துள்ளதுடன், பலருக்கு போட்டோக்கள் சரியாக ஜெனரேட் ஆவதும் இல்லை.

 இதை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சாட்ஜிபிடியின் நிறுவனர் சாம் ஆல்ட்மேன், போட்டோக்களை ஏராளமானோர் கிப்ளிஃபை செய்து வருவதால் சாட்ஜிபிடி சர்வர்கள் ஓவர்லோட் ஆவதாகவும், ஜிபியு உருகுவதாகவும் கூறி கிப்ளிஃபை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள் என பயனாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News