25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளுக்கு தொடர்ந்து 2வது வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளுக்கு தொடர்ந்து 2வது வெற்றி.

உஸ்பெகிஸ்தானின் கண்ட் நகரில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் என மொத்தம் 400 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஓபன் பிரிவின் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இந்தியாவின் நிஹால் சரின், 37-வது நகர்த்தலில் இந்தோனேஷியாவின் ஆரிப் அப்துல் ஹபிசை வீழ்த்தினார்.

மற்ற போட்டிகளில் இந்திய வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜ்ராத்தி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். இதன்மூலம் இந்திய அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்தது. முதல் சுற்றில் தாய்லாந்தை இந்தியா வீழ்த்தியிருந்தது.

பெண்கள் பிரிவின் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பின்லாந்தை எதிர்கொண்டது.

இந்தியாவின் திவ்யா 38-வது நகர்த்தலில் பின்லாந்தின் ஜோஹன்னாவை வீழ்த்தினார். மேலும், இந்திய வீராங்கனைகள் வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் வைஷாலி, அனஸ்டாசியா கெய்னானெனுக்கு எதிரான போட்டியை டிரா செய்தார்.

முடிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்தது. முதல் சுற்றில் டொமினிகன் குடியரசு அணியை இந்தியா வீழ்த்தியிருந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News