சொத்து பிரச்சினைக்கு வழிபடும் தெய்வம் கரூர் மாவட்டம் மாயனூரில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோயில்.
கரூர் மாவட்டம் மாயனூரில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோயில், அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட எல்லைப் பிரச்சினையின்போது செல்லாண்டியம்மன் காட்சியளித்து தீர்ப்பு வழங்கியதாக ஐதீகம் கூறப்படுகிறது.
சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீர வேண்டும் என வேண்டுபவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபடுகின்றனர். குழந்தை வரம் வேண்டுபவர்கள் தொடர்ந்து மூன்று அமாவாசை நாட்களில் அம்மன் சன்னதியில் மரத்தொட்டி கட்டி வழிபடுவதாகவும் கூறப்படுகிறது.
கோயில் வளாகத்தில் துர்கை, கருப்பண்ணசாமி, மதுரைவீரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. ஆடிப்பெருக்கு விழாவின்போது பக்தர்கள் முளைப்பாரி எடுத்துவந்து அம்மனை வழிபடுகின்றனர்.
மேலும், இங்குள்ள காளிங்கநர்த்தன கிருஷ்ணர், முனிவர்கள் மற்றும் சிவனடியாரான சுந்தரர் ஆகியோரின் சிற்பங்கள் கலைநயத்துடன் அமைந்துள்ளன.
0
Leave a Reply