வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் 4 குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமம் குருஸ்டார் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் 4 நபர்களுக்கு மொத்தம் ரூ.12 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (29.06.2024) வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் 29.06.2024 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 இலட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, வெடிவிபத்தில் உயிரிழந்த வெம்பக்கோட்டை வட்டம், அச்சங்குளத்தை சேர்ந்த திரு.ராஜ்குமார் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி ராஜலட்சுமி என்பவருக்கும், சாத்தூர் வட்டம் நடுச்சூரங்குடியை சேர்ந்த திரு.மாரிச்சாமி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி குருவம்மாள் என்பவருக்கும், வெம்பக்கோட்டை வட்டம் V..சத்திரப்பட்டியை சேர்ந்த திரு.செல்வகுமார் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி ஈஸ்வரி என்பவருக்கும், வெம்பக்கோட்டை வட்டம் V..சத்திரப்பட்டியை சேர்ந்த திரு.மோகன் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி விஜய மாரிஸ்வரி என்பவருக்கும் என உயிரிழந்த 4 நபர்களின் வாரிசுதார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டாட்சியர் திரு.லோகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply