25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


குடைமிளகாய் சாகுபடி முறை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குடைமிளகாய் சாகுபடி முறை

குடைமிளகாய் என்பது மற்ற பயிர்களை போலவே பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்றாகும். குடைமிளகாய்ச் செடியின் பெயர் காப்சிக்கம் ஆன்னம் என்பதாகும்.இது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாகசிவப்பு,மஞ்சள்,பச்சை,ஆரஞ்சுநிறங்களில்காணப்படுகிறது.குடைமிளகாய்ச் செடி மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களில் இயற்கையில் விளையும் செடியாகும்.

கே டீ பி எல்-19, பயிடாகி கட்டி ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.ஜூன் ஜூலை மாதங்கள் சாகுபடி செய்ய சிறந்த பருவம் ஆகும்.நல்ல வடிகால் வசதியுடைய, உவர்ப்புத் தன்மை இல்லாத களிமண் குடை மிளகாய் சாகுபடிக்கு ஏற்றது.6.57.0வரை கார அமிலத் தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.ஒரு எக்டருக்கு500 கிராம் விதைகள் வீதம் தேவைப்படும்.ஒரு கிலோ விதைக்கு10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்றங்கால் அமைக்க7 மீ நீளம்,1.2 மீ அகலம் மற்றும்15 செ.மீ உயரம் கொண்ட1012 படுக்கைகளை அமைக்க வேண்டும். விதைகளை10 செ.மீ வரிசை இடைவெளியில்0.5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.1520 கிலோ நன்கு மட்கிய உரம் மற்றும்500 கிராம்15:15:15NPK உரத்தினை விதைத்த1520 நாட்களில் ஒவ்வொரு படுக்கைக்கும் அளிக்க வேண்டும்.

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறைகள் நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 15 டன் தொழுவுரம் அடி உரமாக இட்டு நன்கு உழவேண்டும். நடவு வயலில்4 அடி அகலம் உடைய மேட்டுப் பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைக்க வேண்டும். சொட்டு நீர் பாசனமாக இருந்தால் பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நடுவதற்கு முன் நடவு வயலில் நீர் பாய்ச்ச வேண்டும்.35 நாட்கள் வயதான செடிகளை0.5 சதவீத சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில்30 நிமிடங்கள் நனைத்தபிறகு இரு வரிசை நடவு முறையில்90x60x60 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.நடும் பொழுது நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். அதன்பின் மூன்றாம் நாள் உயிர்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் தன்மைக்கேற்ப பாசனம் செய்ய வேண்டும்.

எக்டருக்கு 20 கிலோ தழைச் சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்தினை நட்ட மூன்று வாரங்களுக்கு பிறகும், 40 கிலோ தழைச்சத்து மற்றும்40 கிலோ சாம்பல் சத்தினை நட்ட ஆறு வாரங்களுக்கு பிறகும் மேலுரமாக இட வேண்டும்.சூடோமோனாஸ் புளோரசன்ஸ்0.5 சதவீதத்தை15 நாட்கள் இடைவெளியில் இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.டிரையகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மி.லி என்ற அளவில் நடவு செய்த 15 மற்றும் 30ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.

நடவுசெய்த30மற்றும்60ம்நாள்களையெடுத்துபராமரிக்கவேண்டும்.ஆந்தராக்னோஸ் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில்2   மேன்கோசெப் கலந்து தெளிக்க வேண்டும்.ஒரு லிட்டர் தண்ணீரில்2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடை கலந்து தெளிப்பதன் மூலம் காய் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.0.3 சதவித நனையும் கந்தகத்தை தெளிப்பதன் மூலம் சாம்பல் நோயை கட்டுப்படுத்தலாம்.

நன்கு வளர்ச்சி அடைந்த காய்களை நடவு செய்த70ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். காய்களின் அளவைப் பொறுத்து தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். சிறிய வளைந்த மற்றும் உருமாற்றமுள்ள காய்களைத் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.மகசூல்ஒரு எக்டரில் இருந்து 25 – 35 டன் காய்கள் வரை மகசூல் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News