25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேங்காய்-பேரீச்சை உருண்டை(Coconut Date Ball ).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேங்காய்-பேரீச்சை உருண்டை(Coconut Date Ball ).

தேவையான பொருட்கள் :
பேரிச்சம்பழம் -1 கப் (கொட்டைகளை நீக்கி),
துருவிய தேங்காய் -1கப்,
பாதாம் -1/4 கப்,
முந்திரி - 1/4 கப்,
ஏலக்காய் தூள் -1/4 டீஸ்பூன்,
நெய்-1 டீஸ்பூன் (விருப்பமெனில்,)
எள் (வறுத்தது) 1 டேபிள்ஸ்பூன் (விருப்பமெனில்).


செய்முறை :
பேரிச்சம்பழத்தை 10-15 நிமிடம் சூடான நீரில் ஊறவைக்கவும்.
தண்ணீரை வடிகட்டி, பேரிச்சம்பழத்தை மிக்ஸியில் போட்டு நெகிழியாக அரைக்கவும்.
ஒரு கடாயில் துருவிய தேங்காயை மிதமான தீயில் 3-4 நிமிடம் வறுக்கவும்.அதில் நெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அரைத்த பேரிச்சம்பழம் விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.
பாதாம், முந்திரியை சிறிதாக நறுக்கி சேர்க்கவும். ஏலக்காய் தூள் மற்றும் எள்ளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கலவை கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும் சிறிது ஆற விடவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி, தேவையானால் துருவிய தேங்காயில் உருட்டி பரிமாறவும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கான சத்தான சிற்றுண்டி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News