தாய்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி ஹாட்ரிக் வெற்றி.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி மகளிர் ஹாக்கி தொடரில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் இத்தொடரில் இந்தியா, சீனா, மலேசியா, தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
முதல் இரண்டு லீக் போட்டிகளில் மலேசியா மற்றும் தென்கொரியாவை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு நவ்னீத் கவுர், தீபிகா ஷெராவத், மும்தாஜ் கான் ஆகியோர் கோல் அடித்து வலுசேர்த்தனர். முதல் பாதியில் 4-0 என முன்னிலை பெற்ற இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறுவதையும் உறுதி செய்தது.
0
Leave a Reply