கணவர் இறந்தால் மாமனார் வீட்டில் மனைவி வசிக்க முடியுமா?.
திருமணத்திற்குப் பிறகு கணவனுடன், கணவனின் தந்தை பெயரில் உள்ள வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த பெண், கணவர் இறந்த பிறகும் அந்த வீட்டில் தொடர்ந்து வசிப்பதற்கான உரிமை உண்டு. கணவர் இறந்துவிட்டார் என்ற காரணத்திற்காக மட்டும் அப்பெண்ணை வீட்டிலிருந்து வெளியேற்ற முடியாது. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்,2005ன் பிரிவு17ன்படி, அப்பெண்ணுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட குடும்ப வீட்டில் வசிக்கும் உரிமை உண்டு. மேலும், பிரிவு19ன்படி, சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அப்பெண்ணை வீட்டிலிருந்து வெளியேற்றுவதைத் தடுக்கும் குடியிருப்பு உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கலாம் .
0
Leave a Reply