தேங்காய் லட்டு.
தேவையான பொருட்கள்-
ஒன்றரை கப் தேங்காய் துருவல்,1/2 கப் சர்க்கரை,1கப் காய்ச்சிய பால்
தேவையானஅளவு டெசிகெடட் கோகனட்,1ஸ்பூன் நெய்
செய்முறை-
அடுப்பில் பேனில் நெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும்.
பிறகு பால் சேர்த்து கலந்து விடவும். பால் சிறிதளவு வற்றி வரும் வரை இடை இடையே கலந்து விடவும்.
பின்னர் சர்க்கரை சேர்த்து கலந்து ஈரப்பதம் இல்லாத நிலை வரும் வரை கிளறி விடவும்.
சுத்தமாக ட்ரை ஆன பின்னர் லேசாக சூடு தணிந்த பின்னர் கையில் உருண்டை உருட்டி லட்டு போல பிடித்து வைக்கவும்.
லேசாக டெசிகெடட் கோகனடில் பிரட்டி எடுத்து கொள்ளவும்.இத போல எல்லாவற்றையும் செய்து கொள்ளவும். சுவையான தேங்காய் லட்டு தயார்.
0
Leave a Reply