'கிளட்ச்' செஸ்: ஒரே நாளில் 3 வெற்றிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடம்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் 'கிளட்ச்' செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், அமெரிக்காவின் பேபியானோ காருவானா மற்றும் ஹிகாரு நகமுரா ஆகிய உலகின் முன்னணி 4 வீரர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.
இரண்டாவது நாளில் 4, 5 மற்றும் 6-வது சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மூன்று போட்டிகளிலுமே பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றார். முதல் நாள் முடிவில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருந்த பிரக்ஞானந்தா, 2-வது நாள் ஆட்டங்களின் முடிவில் மொத்தம் 11 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
0
Leave a Reply