தேங்காய் பால் கஞ்சி.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 டம்ளர் (அல்லது 1/2 கப்),
தேங்காய் பால் (முதல் பால்) - தேவையான அளவு (அல்லது 2 கப்),
பூண்டு - 3 முழு பூண்டு (தோல் உரித்தது) அல்லது 10 பல்,
வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - 5 டம்ளர்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியைக் கழுவி 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
குக்கரில் 5 டம்ளர் தண்ணீர், உரித்த பூண்டு, வெந்தயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
குக்கரை மூடி 3 விசில்விட்டு அரிசியை நன்கு வேகவைக்கவும்.
விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, நாம் எடுத்து வைத்துள்ள கெட்டியான தேங்காய்பாலைச் சேர்த்து மிதமான தீயில் ஒருமுறை கிளறி இறக்கவும்.
இப்போது ஆரோக்கியமான மற்றும் சுவையான தேங்காய் பால் கஞ்சி தயார்!
தேங்காய் பால் கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் தேங்காய் பால்,பூண்டு,
வெந்தயம் சேர்ப்பதனால் மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது.
0
Leave a Reply