வெந்தய கஞ்சி.
தேவையான பொருட்கள் :
அரிசி (அல்லது அரிசி குருணை) - 1 கப்
வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பல் (தோல் உரித்தது)
தண்ணீர் - 6 கப்
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
குக்கரில் 1 கப் அரிசி மற்றும் உரிக்கப்பட்ட 6 பல் பூண்டு சேர்த்துக்கொள்ளவும்.
அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் மற்றும் 6 கப் தண்ணீர் ஊற்றவும்.
குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் விட்டு நன்றாக வேக வைக்கவும்.
விசில் அடங்கியதும் குக்கரை திறந்து, தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்துநன்கு கிளறிவிடவும்.
இப்போது சத்தான மற்றும் உடல் குளிர்ச்சி தரும் வெந்தய கஞ்சி தயார்.
உடல் சூட்டைத் தணித்து ஆரோக்கியம் தரும் சுவையான வெந்தய கஞ்சி இதனைத் தேங்காய்துவையல் அல்லது புதினா துவையலுடன் பரிமாறலாம்.
0
Leave a Reply