அனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (பயிற்சி) / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.08.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி) / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரு.ஆர்.ஆனந்தகுமார்,I A S., அவர்கள் அனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.தற்போது பல்வேறு துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், செயல்பாடுகள் தொடர்பாகவும் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள நவீன மின்சார தகன மேடைகளின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் நேரடியாக சென்று சேர்வதற்கு அரசின் விதிமுறைக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், அழகாபுரி ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து, மருந்துகளின் இருப்பு குறித்தும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் மருந்துகள், வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி) / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.பின்னர், மீசலூர் அரசு மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, கல்வி முறைகள், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் மாணவர்களின் கல்வி தரம் குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தினை பார்வையிட்டு, பதிவேடுகள், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள், தீர்வுகள், நிலுவையில் உள்ள மனுக்கள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,இ.ஆ.ப., உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திருமதி விசாலாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply