தொழில் நிறுவனங்கள் தமிழக அரசின் சிறந்த தொழில் நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. தற்போது 2023-24 ஆம் ஆண்டிற்கான கீழ்காணும் பிரிவுகளில் சிறப்பாக தொழில் செய்து வரும் தொழில் முனைவோர்களை விருதுகளுக்காக விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.
1. மாநில அளவிலான சிறந்த வேளாண்-சார் உற்பத்தி தொழில் முனைவோருக்கான விருது
2. மாநில அளவிலான சிறந்த மகளிர் தொழில் முனைவோருக்கான விருது
3. சிறப்பாக செயல்படும் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினை சார்ந்த தொழில் முனைவோருக்கான மாநில அளவிலான விருது
4. மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது
5. மாவட்ட அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது
6. மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதியில் சிறப்பாக செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
இவ்விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தொழில் நிறுவனங்கள் 2023-24 நிதியாண்டிற்கு முன்னதாக தொடர்ந்து மூன்று ஆண்டுகள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும் உத்யம் பதிவுச்சான்றும் பெற்றிருக்க வேண்டும்.
கீழ்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 20.05.2024 ஆகும்.
விண்ணப்பப் படிவங்களை awards.fametn.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து உரிய இணைப்புகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் மற்றும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட தொழில் மையத்தை அணுகுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
0
Leave a Reply