கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்
விருதுநகர் மாவட்ட காணொளி காட்சி கூட்டரங்கில் (02.09.2024) கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக தலைமை செயலாளர் திரு.நா.முருகானந்தம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், ஆய்வுக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றதை தொடர்ந்து, மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில்;, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை, சமூக பாதுகாப்பு அலுவலகம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பெண்கள் கல்லூரி மற்றும் விடுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மாணவிகளுக்கு தொலைபேசியின் மூலம் பணியாளர்கள், மாணவர்கள் மூலமாகவோ தொந்தரவுகள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், 181,1091 ஆகிய புகார் எண்களை தொடர்பு கொள்ளலாம்.கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான புகார்களை மறைப்பது கல்லூரி நிர்வாகத்தின் மிகப்பெரிய தவறாகும். அவ்வாறு செயல்படும் பட்சத்தில் அந்த கல்லூரி நிர்வாகத்தின் மீதும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுக்களிடம் பெறப்படும் புகார்களுக்கு விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு, சட்டத்தின் வழியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த சட்டங்கள், விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.எனவே, இதனுடைய முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு அனைத்து பள்ளி கல்லூரி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மேலாண்மை குழு இணைந்து செயல்பட வேண்டும்.கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா, புகார்பெட்டி, பாலியல் துன்புறுத்தல் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள காவல்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை ஆகிய துறை அலுவலர்கள் மூன்று நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.மேலும், மாவட்டத்தில் தொடர்ச்சியாக் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் குறித்து, தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளிகளில் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு, மாணவர்களின் செயல்பாடுகள் குறித்தும், போதை பொருள்கள் பயன்பாடு, விற்பனை குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு கிடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.
மாவட்டத்தில் குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும் குறிப்பாக பெண் குழந்தைகள் மாணவிகள் பாலியல் சார்ந்த குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும், போதை பொருட்களில் இருந்து அவர்களுடைய வாழ்க்கையை காப்பதற்கும் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள்தெரிவித்தார்.இக்கூட்டத்தில், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு.அசோகன் (சைபர் கிரைம்), திரு.சூரியமூர்த்தி (குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரிரான குற்றங்களைத் தடுத்தல்) உட்பட காவல்துறை, பள்ளிக்கல்வித் துறை, சமூக நலத்துறை, கல்லூரி நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply