பப்பாளி சாகுபடி
பப்பாளி ஒரு பழம் தரும் மரமாகும். இதற்கு பறங்கிப்பழம் என்று மற்றொரு பெயரும் உள்ளது.பப்பாளியின் தாயகம் மெக்சிக்கோவாகும். தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளில் பப்பாளி அதிகமாக விளைகிறது.கோ.1,கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7, கூர்க்கனிடியூ மற்றும் சூரியா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். இருந்தாலும் ஜீன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் நடவிற்கு மிகவும் ஏற்றது. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல்இருப்பதுநல்லது.பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும் களிமண் பூமி சாகுபடி செய்ய ஏற்றதல்ல.ஒரு எக்டருக்கு நடவு செய்ய500 கிராம் விதைகள் தேவைப்படும்.நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு பாலித்தீன் பையில் நான்கு விதைகள் வரை விதைக்கலாம். பிறகு பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்றவேண்டும். நாற்றுக்கள் 60 நாட்களில் நடவுக்குத் தயாராகிவிடும்.
நிலத்தை2 அல்லது3 முறை உழுது சமன் செய்ய வேண்டும். பிறகு1.8 மீட்டர் இடைவெளியில்45 செ.மீ நீளம்,45 செ.மீ அகலம் மற்றும்45 செ.மீ ஆழத்தில் குழிகள் எடுக்கவேண்டும். குழிகளில் மண் மற்றும் தொழு உரம் இட்டு நீர் ஊற்றி ஆற விட வேண்டும்.தயார் செய்துள்ள குழிகளில் நாற்றுகளை மையப்பகுதியில் நட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்சினால் போதுமானது. செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, ஒரு ஏக்கருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தை கொடுக்க வேண்டும்.நட்ட20 நாட்களில் களை எடுக்க வேண்டும். செடிகளைச் சுற்றி களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். களை எடுத்தப் பின் மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.நன்கு திரண்ட பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக மாறும் போது அறுவடை செய்யவேண்டும்.
மகசூலானது இரகங்களை பொறுத்து வேறுபடும். கோ.2 இரகமாக இருந்தால் எக்டருக்கு250 டன்களும், கோ.3 இரகத்தில்120 டன்களும், கோ.5 இரகத்தில்250 டன்களும், கோ.8 இரகத்தில்160 டன்களும், கோ.7 இரகத்தில்225 டன்களும் மகசூல் கிடைக்கும்.பப்பாளி சாகுபடியின் நோய்தண்டு அழுகல்/ தூர் அழுகல் நோய்,பப்பாளி மாவுப்பூச்சிசாம்பல் நோய், வளைப்புள்ளிநோய், இலைசுருண்டல்நோய்,,ஆன்த்ராக்நோஸ்பப்பாளி சாகுபடியில் வரும் நோய்கள்..
0
Leave a Reply