பெண்கள் ஆசிய கோப்பை: ஹாங்காங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்.
10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடைபெற்று வருகிறது.
இதில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஹாங்காங் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஷவால் ஜூல்பிகர் அதிகபட்சமாக 47 ரன்கள் (35 பந்துகள், 6 பவுண்டரிகள்) விளாசினார்.
தொடர்ந்து 144 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹாங்காங் அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19 ஓவர்களில் 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
‘ஏ’ பிரிவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, அரையிறுதியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.
0
Leave a Reply