சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் (06.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், நடையனேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பயன்பாட்டு மையத்தினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டப்பட்டு வருவதையும்,புதுக்கோட்டை ஊராட்சி பர்மா காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.03 இலட்சம் மதிப்பில் ஊரணி துர்வார்தல் மற்றும் குளியல் தொட்டி கட்டப்பட்டு வருவதையும்,செவலூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.35 இலட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டு வருவதையும்,எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார மைய கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் எம்.புதுப்பட்டி கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், தேவர்குளம் ஊராட்சியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.32.80 இலட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளையும்,ஆனையூர் ஊராட்சியில் லட்சுமியாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பணிகளை விரைவாகவும் தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply