சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் (14.09.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, சிவகாசி மாநகராட்சி பகுதியில், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.61 இலட்சம் மதிப்பில் செல்லி அம்மன் கோவில் ஊரணி, தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வரும்; பணியினையும்,திருத்தங்கல் வடக்கு ரத வீதியில், ரூ.25 இலட்சம் மதிப்பில் கிளை நூலகக் கட்டடம் கட்டப்பட்டு வரும் பணியினையும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், சிவகாசி மாநகராட்சி வார்டு 23-ல், ரூ.15 இலட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும், ரூ.3.30 கோடி மதிப்பில், சிவகாசி பேருந்துநிலையத்தில் உள்ள வணிக வளாகங்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் கூடம், சுகாதார வளாகம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply