மாவட்ட கலைக்கல்லூரிகளில் காலிப்பணியிடம் இருப்பதால் கல்லூரிக் கல்வி இயக்ககம், இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தேதியினை நீட்டித்துள்ளது
விருதுநகர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2023 - 24ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 17,448. தேர்ச்சி பெற்ற மாணவர்களில் இதுவரை மொத்தம் 17,198 பேர் (98.6%) (கலந்தாய்வில் கலந்து கொள்ள காத்திருக்கும் மாணவர்களையும் சேர்த்து) உயர்கல்விக்கு செல்கிறார்கள். மீதம் உள்ள 308 மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதற்கட்ட சேர்க்கை நடந்து முடிந்த நிலையில் மேற்கண்ட பாடப்பிரிவில் காலிப்பணியிடம் இருப்பதால் கல்லூரிக் கல்வி இயக்ககம், இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தேதியினை நீட்டித்துள்ளது. TNGASA இணையதளத்தில் விண்ணப்பிக்காத மாணவர்கள் 03.07.2024 முதல் 05.07.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.அரசு கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் ரூ.1000/- வீதம் கல்வித் தொகை கிடைக்கும்.
பாடப்பிரிவு காலியிட விவரம்
1 அரசு கலைக்கல்லூரி, சாத்தூர்.
பி.ஏ., தமிழ் 21
பி.ஏ., ஆங்கிலம் 43
பி.எஸ்.சி., கணிதம் 55
பி.காம்., 17
2 அரசு கலைக்கல்லூரி, திருச்சுழி.
பி.ஏ., தமிழ் 04
பி.ஏ., ஆங்கிலம் 44
பி.காம்., 26
பி.எஸ்.சி., வேதியியல் 21
பி.எஸ்.சி., கணினி அறிவியல் 14
3.அரசு கலைக்கல்லூரி, அருப்புக்கோட்டை
பி.ஏ., தமிழ் 30
பி.ஏ., ஆங்கிலம் 48
பி.எஸ்.சி., கணிதம் 48
பி.காம்., 15
4.அரசு கலைக்கல்லூரி, திருவில்லிபுத்தூர்
பி.ஏ., ஆங்கிலம் 14
பி.எஸ்.சி., கணிதம் 45
5. அரசு கலைக்கல்லூரி, சிவகாசி
பி.ஏ., தமிழ் 02
பி.ஏ., ஆங்கிலம் 04
பி.எஸ்.சி., கணிதம் 19
பி.காம்., 01
பி.எஸ்.சி., கணினி அறிவியல் 02
பி.எஸ்.சி., தாவரவியல் 08
பி.எஸ்.சி., விலங்கியல் 02
பி.எஸ்.சி., வேதியியல் 02
பி.எஸ்.சி., இயற்பியல் 06
பி.பி.ஏ., 04
பி.ஏ., வரலாறு 12
பி.ஏ., பொருளாதாரம் 05
எனவே விருதுநகர் மாவட்டத்தில் இது வரை கல்லூரிகளில் சேராத மாணவர்கள் உடனடியாக சேருவதற்கும், இதற்கு முந்தைய ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களும் இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து படித்து பட்டம் பெறுவதற்கு முன் வரவேண்டும்.
பெற்றோர்களும், உறவினர்களும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கக் கூடிய உயர்கல்வி ஆலோசனை மையத்தில் வந்தும் விண்ணப்பித்தும் கொள்ளலாம். இதற்காக உயர்கல்வி சேர்க்கைக்காக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 05.07.2024 அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply