25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மீனவர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் நலவாரிய உறுப்பினர்கள் தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மீனவர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் நலவாரிய உறுப்பினர்கள் தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தேசிய மீன்வள டிஜிட்டல் தளம்  (NFDP) -என்ற இணையதளத்தில் பதிவு செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.மீனவர் குழு விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் (GAIS) மூலம் வழங்கப்படும் நிவாரணத் தொகை பெற்றிட தேசிய மீன்வள டிஜிட்டல்   தளத்தில் (NFDP) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து உறுப்பினர்களும் அருகாமையிலுள்ள இ-சேவை மையம் மற்றும் CSC கணினி மையங்களை அணுகி தேசிய மீன்வள டிஜிட்டல்   தளத்தில் (NFDP) பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், (பழைய கட்டிடம் இரண்டாவது தளம்) விருதுநகர் - 626 001. தொலைபேசி எண்: 04562-244707 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News