வண்டிகளின் நம்பர் பிளேட் நிறங்களின் அர்த்தம் தெரியுமா?
சாலையில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் வெவ்வேறு நிறங்கள் இருப்பதை கவனித்திருப்பீர்கள். ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு அர்த்தம் உள்ளது!
வெள்ளை
நாம் சொந்தமாகப் பயன்படுத்தும் கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்களுக்கு வெள்ளை நிற நம்பர் பிளேட் வழங்கப்படுகிறது.
மஞ்சள்
டாக்ஸி, லாரி, பஸ் உள்ளிட்ட வாடகை மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனங்களுக்கு மஞ்சள் நிற நம்பர் பிளேட் பயன்படுத்தப்படுகிறது.
பச்சை
மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட் வழங்கப்படுகிறது.
நீலம்
வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களில் நீல நிற நம்பர் பிளேட் இருக்கும். இதில் ‘CD’, ‘CC’ போன்ற குறியீடுகள் இடம்பெறும்.
சிவப்பு
இந்திய ஜனாதிபதி, ஆளுநர் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களில் சிவப்பு நிற நம்பர் பிளேட் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply