ஹைலோ ஓபன் பேட்மின்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து.
ஜெர்மனியில் சூப்பர் 500 அந்தஸ்து பெற்ற ஹைலோ ஓபன் பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, டென்மார்க்கின் அமாலி ஷூல்சை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சிந்து, முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 21-10 என்ற கணக்கில் எளிதில் வென்றார்.
மொத்தம் 28 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply