25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கல்வி வளர்ச்சி தினவிழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கல்வி வளர்ச்சி தினவிழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இரண்டாம் வகுப்பு மாணவி சுபிக்ஷா ஸ்ரீ அனைவரையும் வரவேற்று பேசினாள். மாணவன்அஸ்வின் காமராசர் போல் உடை அணிந்து அழகாக பேசினான். மாணவன் சத்ரேஸ் கல்வியின் சிறப்புகள்பற்றி எடுத்துரைத்தான். மாணவிகள் பெண் கல்வி பற்றியபாரதிதாசன் பாடலை இனிமையாக பாடினார்கள். மேலும் மாணவிகள் அஜ்வா மற்றும் ஜெனிதா இருவரும் குருகுல முறை மற்றும் தற்கால கல்விமுறை பற்றியும் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்கள். மாணவர்கள் குருஷித் மற்றும் மதுமிகா
இருவரும் தனித்தனியே பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார்கள்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் பாராட்டினார். மேலும் அவர் மாணவர்களிடையே நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கவனிக்க வேண்டும் என்றும் கேள்விகள் சில கேட்டும் உற்சாகப்படுத்தினார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி ஜெயபவானி அவர்கள் கல்வி பற்றிய செய்திகளை கூறினார். பள்ளி நிர்வாகக் குழு அலுவலர் திரு. வெங்கட பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் கல்விக்கண் திறந்த காமராசர் பற்றிய செய்தியை விளக்கமாகக் கூறினார். மாணவன் மாதேஷ் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News