25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில்  குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தினை (28.09.2026) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக  மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் “தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை” மாநில அளவில் தொடங்கி வைத்துள்ளார்.

  தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் என்பது தாய் மாமன் என்ற உறவின் அன்பையும், பாசத்தையும், தமிழர் பண்பாட்டு மரபையும் போற்றும் வகையில் செயல்படுத்தப்படும் சிறப்புமிக்க திட்டமாகும். தாய் மாமன் என்ற உறவு தமிழர் குடும்பம் மற்றும் பண்பாட்டு வாழ்வில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். அந்த உறவின் அன்பையும், பாசத்தையும், குடும்ப ஒற்றுமையையும் போற்றும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக மொத்தம் 5 வட்டார தலைமை மருத்துவமனைகள் மற்றும் 72 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூன் 22.06.2026 முதல்  அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 481 குழந்தைகளும்,  அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 432 குழந்தைகளும், சிவகாசி அரசு மருத்துவமனையில்  800 குழந்தைகளும், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 520 குழந்தைகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 443 குழந்தைகள் என மொத்தம் 2676 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 5 வட்டார தலைமை மருத்துவமனைக்கு தலா 50 பயனாளிகள் வீதம் மொத்தம் 250 பயனாளிகளுக்கு இன்று(28.09.2026) தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இனி வரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு  72 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக பிரசவிக்கும் தாய்மார்களுக்கு அவர்கள்  மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லும்போதே தாய்மாமன் தங்க மோதிரம் கொடுத்து அனுப்பிவைக்கப்படும். இத்திட்டத்தின் பயன்கள் பயனாளிகளை சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மக்களின் வாழ்க்கையோடு நேரடியாக தொடர்புடைய நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. “தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்” மூலம் தாய் மாமன் உறவின் சிறப்பையும், குடும்ப பாசத்தையும் போற்றும் மகிழ்ச்சியான தருணம் உருவாக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இத்திட்டத்தின் பயன்கள் தகுதியான அனைத்து பயனாளிகளையும் சென்றடையும் வகையில்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதாராணி, மருத்துவப் நலப் பணிகள் இணை இயக்குநர் காளிராஜ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ அலுவலர் வைஷ்ணவி, மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News