தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மற்றும் காரியாபட்டி ஆகிய 4 வட்டாரங்களைச் சார்ந்த 184 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விருதுநகர் மற்றும் காரியாபட்டி வட்டாரங்களை ஒன்றிணைத்து விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் முதன்மைச் செயல் அலுவலர்-1 மற்றும் கொள்முதல் விற்பனை மேலாளர்-1 பணியிடம் நிரப்பபடாமல் உள்ளது.
முதன்மைச் செயல் அலுவலர் அவர்களின் தகுதிகளாக B.ScAgri, / D.Agri / MBA முடித்திருக்க வேண்டும். வயது 25 முதல் 40 வரை ஊதியம் ரூ.15000/- மற்றும் கொள்முதல் விற்பனை மேலாளர் அவர்களின் தகுதிகளாக ஏதேனும் ஒரு பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். வயது 25 முதல் 45 வரை ஊதியம் ரூ.10000/- மேற்குறிப்பிட்ட பணிகளில் அனுபவமுள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேற்படி விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களுடைய சுய விபரபடிவம் (Resume) மின்னஞ்சல் மூலமாக, தபாலிலோஅல்லது நேரிலோ vnr.tnrtp@yahoo.com வருகிற 05.10.2024-ம் தேதி மாலை 5 மணிக்குள்; அனுப்ப வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply