25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இந்தியாவின் பிற மாநிலங்களில் வாக்குரிமை உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்களிக்க செல்ல ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் பிற மாநிலங்களில் வாக்குரிமை உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்களிக்க செல்ல ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்

    2024 ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தல்  முதல்கட்டமாக 19.04.2024 அன்று தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பிற மாநிலங்களில் 26.04.2024, 07.05.2024, 13.05.2024, 20.05.2024, 25.05.2024 மற்றும் 01.06.2024 ஆகிய தேதிகளில் பல கட்டங்களாக மக்களவை மற்றும் சில மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும்  நடைபெறவுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும்  வெளி மாநிலங்களில்  வாக்குரிமை உள்ள தினக்கூலி / தற்காலிக பணியாளர்கள் / ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து  பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களும் அந்தந்த மாநில தேர்தல் நாளில் அவரவர் சொந்த மாநிலத்திற்கு சென்று வாக்களிக்க ஏதுவாக  மக்கள்  பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன் கீழ் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என சம்;பந்தப்பட்ட அனைத்து தொழிற்சாலைகள் / கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.அவரவர் சொந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்களிக்க செல்லும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு அன்றைய தினத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தவறும் தொழிற்சாலைகள்  மற்றும்  கட்டுமான நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
               
 தமிழ்நாட்டில் தங்கி பணியாற்றும் வெளி மாநிலங்களில் வாக்குரிமை பெற்ற தொழிலாளர்கள் மேற்படி தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத தொழிற்சாலைகள் ஃ  கட்டுமான நிறுவனங்கள் தொடர்பாக புகார் அளிக்க ஏதுவாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான குறைகளை திரு.ஏ.வேல்முருகன் - 88257 11344, திரு.சு.இரவிக்குமார் - 94437 64310,  திருமதி பெ.சுசீலா - 98658 11166, திரு.பி.ராஜ்குமார் - 93447 45064, திருமதி இரா.தீபா  - 90036 45279 திரு.டி.எஸ்.சஜின் - 99947 21299 என்ற எண்களில் தொடர்;பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News