விருதுநகர் மாவட்டத்தில் மே மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மே 22-ம் தேதி நடைபெற உள்ளது .
விருதுநகர் மாவட்டத்தில் மே - 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22.05.2026 அன்று காலை 11.00 மணியளவில், விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S,.அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயப் பெருமக்கள், விவசாயம் சார்ந்த பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனுக்களாக அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவாதங்களின் போது ஒவ்வொரு வட்டாரத்திற்கும் இருவர் வீதம் (வட்டாரத்திற்கு இருவர்) பொதுவான கோரிக்கைகள் குறித்து மட்டும் விவாதிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தைச் சிறந்த முறையில் நடத்திட விவசாயப் பெருமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply