25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


எப்.எப்.எஸ். செயலி மூலம் உரங்கள் விநியோகிக்கப்பட உள்ளதால் தங்களது அடையாள எண்ணை பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எப்.எப்.எஸ். செயலி மூலம் உரங்கள் விநியோகிக்கப்பட உள்ளதால் தங்களது அடையாள எண்ணை பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு எப்.எப்.எஸ். செயலி மூலம் உரங்கள் விநியோகிக்கும் நடைமுறை நவம்பர் முதல் வாரத்தில் அமல்படுத்தப்படுகிறது.  நாடு முழுவதும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கான மானிய விலை உரங்கள் விற்பனையை ஒழுங்குபடுத்தி கண்காணிக்க உர விற்பனைக்கான கட்டமைப்பு என்ற முறையில் மத்திய வேளாண் அமைச்சகம் செயல்படுத்தி உள்ளது. 

இத்திட்டத்தில் தமிழகத்தில் முதற்கட்டமாக சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஆண்ட்ராய்டு கைபேசி வைத்து எப்.எப்.எஸ். செயலியை பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியின் மூலம் விவசாயிகள் தங்களது ஆதார் எண். ஒடிபி பதிவு செய்ய வேண்டும்.    விருதுநகர் மாவட்டத்தில் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 94,782 ஆகும்.  இதில் 81,593 விவசாயிகள் அடையாள எண் பெற்றுள்ளனர்.  அடையாள எண் வைத்துள்ள விவசாயிகளாக இருந்தால் அவர்கள் விளை நிலங்கள் விவரங்கள் காண்பிக்கப்படும்.  விவசாயிகள் சாகுபடி செய்த பயிர் அதற்குரிய மானிய விலை உரமூட்டைகள் தேர்வு செய்தால் போதும் க்யு.ஆர் கோடு உடனே வந்துவிடும். விவசாய அடையாள எண் இல்லாத விவசாயிகளாக இருந்தால் விளைநிலங்களின் விவரங்களை பதிவிட்டால் தான் க்யு. ஆர். கோடு கிடைக்கும். 
 
மேலும், இந்த செயலி உரங்கள் இருப்பு மற்றும் விற்பனை நிலையங்களை குறித்து காண்பிக்கும்.  இதன் மூலம் தாங்கள் விரும்பும் விற்பனை நிலையங்களை தேர்வு செய்து நேரில் சென்று, விற்பனை முனைய கருவி மூலம் டோக்கன்களை ஸ்கேன் செய்து உரங்களை பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் நேரில் செல்ல முடியவில்லை என்றால் தாங்கள் பிரதியின் ஆதார் எண்ணை பதிவு செய்து டோக்கன்களை பெற்று உரங்களை பெறலாம்.  

இந்த செயலின் மூலம் அரசு நிலம், கோவில் நிலம், குத்தகை சாகுபடியாளர்களும் தங்களது ஆதார் எண், பயிர் மற்றும் விளை நிலங்களின் விவரங்களை உள்ளிட்டு பதிவு மேற்கொண்டு, எப்.எப்.எஸ். செயலியின் மூலம் க்யு.ஆர். கோடு டோக்கனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.    ஆண்ட்ராய்டு மொபைல் இல்லாதவர்கள்  அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று தங்களது விளை நிலங்களின் விவரங்களை பதிவு செய்து க்யு.ஆர். கோடினை பெற்றுக் கொள்ளலாம்.    விவசாய அடையாள எண் இருக்கும் விவசாயிகள் எளிதில் பதிவு செய்து டோக்கனை பெற முடியும்.   

எனவே, இதுவரை அடையாள எண் பெறாதோர் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டே அல்லது பொது சேவை மையங்களிலோ பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி  I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News