கொத்தமல்லி சாகுபடி.
கொத்தமல்லி ஒரு மசாலா பயிர்.எளிதில்வளரும் இந்தகொத்தமல்லி பல்வேறுதன்மையுடைய மண்வகைகளிலும், வேறுபட்டவானிலைகளிலும் வளரும்தன்மை கொண்டது.இதில் நல்லவடிகால் வசதியுள்ளஇரு மண்பாட்டுநிலம் கொத்தமல்லிசாகுபடி செய்யமிகவும் உகந்தது. இதற்கு மண்ணின்அமில காரநிலை 6 - 8 வரைஇருக்க வேண்டும். மல்லி ஓரளவுகளர் உவர்தாங்கி வளரக்கூடியது, காற்றின் சராசரிவெப்பநிலை20-25 செல்சியஸ்இருத்தல் பயிரின்வளர்ச்சிக்கு உகந்தது.மல்லி பெரும்பாலும்மானாவாரிப் பயிராககரிசல் மண்நிலத்தில் பயிரிடுவதால்மழை அளவுகுறைவாகவும், சீராகவும்இல்லாத காலங்களில்இதன் விளைச்சல்குறைவாகவே உள்ளது.இவ்வாறு நீர்பற்றாக்குறை இருக்கும்காலங்களில் வறட்சியைத்தாங்கி விளைச்சலைஅதிகரிக்க விதைநேர்த்தி சிறந்தது.
எருக்கு மற்றும்வேலிக்கருவேல் இலையிலிருந்துதயாரிக்கப்பட்ட 2 சதக்கரைசலில் உடைக்கப்பட்டகொத்தமல்லி விதைகளை 16 மணி நேரம்ஊறவைத்து(1 லிட்டர்கரைசலுக்கு800 கிராம்)விதைகளை விதைநேர்த்தி செய்யலாம்.பின்னர் விதைகளைநிழலில் உலர்த்திமறுபடியும் விதைகளை100 கிராம் அசோஸ்பைரில்லம்கலந்த ஆறியகஞ்சியில் விதைநேர்த்திசெய்து நிழலில்உலர்த்தி விதைப்பதால்15 நாட்களில்89 சதம்முளைப்புத் திறன்கிடைப்பதோடு முளைக்கும்நாற்றுகளின் வளர்ச்சியும்வீரியமும் அதிகமாகக்காணப்படும். விதைநேர்த்தி செய்யப்பட்டுமுளைத்த நாற்றுகளில்இரண்டாவது பக்கக்கிளைகள், பூங்கொத்தில்உருவாகும் விதைகளின்எண்ணிக்கை மேம்படுவதுடன்வறட்சியைத் தாங்கவல்லகாரணிகளான புரோலின்,பச்சையம், நிலைப்புத்தன்மை மற்றும்திசுக்களின் தண்ணீர்சார்பளவு ஆகியனஅதிக அளவுஇருப்பதால் நீர்பற்றாக்குறை உள்ளநிலங்களிலும் விளைச்சல்அதிகரிகின்றது. கொத்தமல்லியில்கோ. 1,2,3 மற்றும்சாதனா முதலியஇரகங்கள் அதிகஅளவில் பயிரிடப்படுகின்றன.
ஜுன்& ஜூலை மற்றும்செப்டம்பர்& அக்டோபர்ஆகிய இரண்டுபருவத்தில் பயிரிடப்பட்டாலும்செப்டம்பர்& அக்டோபர்பட்டத்தில் மட்டுமேமானாவாரியில் அதிகஅளவு கொத்தமல்லிசாகுபடி செய்யப்படுகிறது.மண் பேணல்நிலத்தை மூன்றுநான்கு முறைஉழுது மண்ணைமிருதுவான பதத்திற்குக்கொண்டுவரச் செய்து,கடைசி உழவின்போது எக்டருக்கு10 டன் மக்கியதொழு எருவிட்டுமண்ணுடன் கலந்துஇறவையாக பயிரிடுவதாகஇருந்தால் சமபாத்திகள்அமைத்து விதைகளைவிதைக்க வேண்டும்.மானாவாரி சாகுபடிஎன்றால் உழவிற்குமுன்னர் தொழுஎருவிட்டு உழுதுவிதைகளைச் சீராகத்தூவிப் பின்னர்நன்கு படர்ந்தமரக்கிளைகள் காய்ந்தமரக்கிளைகளை ஒடித்துமண்ணின் மேல்வைத்து மெதுவாகக்கையால் இழுப்பதன்மூலம் மண்ணில்தூவப்பட்ட விதைகள்மண்ணால் மூடப்பட்டுமுளைக்க ஆயத்தமாகும்.இறவையில் விதைகளைவிதைக்கும் முன்னர்எக்டருக்கு15 கிலோதழைச்சத்து,40 கிலோமணிச்சத்து மற்றும் 20 கிலோ சாம்பல்சத்துஅடியுரமாக இடவேண்டும். மானாவாரிப் பயிராகஇருப்பின் கடைசிஉழவிற்குப் பின்னர்எக்டருக்கு 20 கிலோதழைச்சத்தையும், 30 கிலோமணிச்சத்தையும் மற்றும் 20 கிலோ சாம்பல்சத்தையும் அடியுரமாகஇடவேண்டும்.
நல்லவடிகால் வசதியுள்ளநிலத்திலும். காரஅமிலத்தன்மை6 முதல்8 வரை இருக்கும்மண் வகையிலும்கொத்தமல்லியை சாகுபடிசெய்யலாம். இது25 முதல் 28 டிகிரிவெப்பத்தில் வளரக்கூடியவைஅனனத்துப்பருவத்திலும் சாகுபடிசெய்யலாம். வெயில்காலங்களில் நிழல்வலை அமைத்துபயிர் செய்வதன்மூலம் கொத்தமல்லிஇலைகள் வதங்காமல்இருக்கும்.
ஒருஎக்டருக்கு10 முதல்15 கிலோ விதைதேவைப்படும்15 முதல்30 நாட்கள் வரைசேமித்த கொத்தமல்லிவிதைகளை இரண்டாகஉடைத்து அதனைநடவு செய்யவேண்டும். உடைத்தவிதைகளைக் காலணியால்மிதித்தும் அல்லதுசொர சொரப்பானநிலப்பரப்பிலோ அல்லதுஉப்பு கலந்தகாகிதத்திலோ தேய்த்துஉறக்க நிலையில்இருக்கும் விதையினைகிழிப்படையச் செய்துபின்னர் முன்புகூறியபடி விதைநேர்த்தி செய்துவிதைக்க வேண்டும்.மானாவாரி விதைப்புஎனில் கையால்தூவியும். இறவைஎனில் வரிசையிலும்விதைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளியும் இருத்தல்வேண்டும்.விதைத்த 30 நாட்களில் வரிசையில் 15 செ.மீஇடைவெளியில் பயிர்இருக்குமாறு செடிகளைக்கீரையாக விற்பனைக்குஅனுப்பலாம்.இறவையில்விதைத்தவுடன் மற்றும்மூன்றாம் நாளும்அதன் பின்னர்7 முதல்10 நாட்களுக்குஒரு முறையும்நீர்ப்பாய்ச்ச வேண்டும்.இறவையில்30 ம் நாள் பயிரைக்கலைத்த பின்புமேலுரமாக எக்டருக்கு15 கிலோ தழைச்சத்தைஇட்டு மண்ணுடன்கலந்து நீர்ப்பாய்ச்சவேண்டும்.
செடிகளின்இலைகளைத் தாக்கும்மேல்சாம்பல் நோயினைத்தடுக்க நனையும்கந்தகம் அல்லதுகாரத்தேன் 0.2 சதம் (எக்டருக்கு1 கிலோ500 லிட்டர் தண்ணீர்)தெளிப்பதன் மூலம்கட்டுப்படுத்தலாம். தானியத்தில்வரும் கரும்பூசண நோயைக்கட்டுப்படுத்த கார்பன்டாசிம்0.1 சதம்(500 கிராம்மருந்தை500 லிட்டர்தண்ணீர்) தெளித்துகட்டுப்படுத்தலாம்.இளம்பருவப் பயிரில்சேதம் விளைவிக்கும்இலை தின்னும்புழுக்களையும், பூக்கும்தருணத்தில் காணப்படும்அசுவுணியைக் கட்டுப்படுத்தவும் 5 சதம் வேப்பம்பருப்புக் கரைசல்சாறை உபயோகிக்கவும்.0.05 சதம் மிதைல்டேமாட்டான் மருந்தினையோதெளிப்பதன் மூலம்பூக்கும் பருவத்தில்மகரந்தச் சேர்க்கைஏற்படுத்தும் பூச்சிகளைக்கட்டுப்படுத்தி விளைச்சல்குறைவதைத் தவிர்க்கலாம்.விதைத்த 30 நாட்கள் கழித்துகளைக்கொத்து கொண்டுகளைகளை அப்புறப்படுத்தவேண்டும்.
விதைத்த30 ம் நாள் செடிகளைக்கலைத்து இளங்கீரையாகவும்,பின்னர்60 மற்றும்75 வது நாட்களில்50 சதவிகித இலைகளையும்அறுவடை செய்யலாம்சாதாரணமாக 90 முதல் 110 நாட்களில் விதைஅறுவடை செய்யப்படுகிறது. காய்கள் நன்குமுதிர்ந்தவுடன் (காயின்நிறம் பச்சைநிறத்திலிருந்து பொன்னிறமாகமாறும் போது)அறுவடை செய்வதால்நிலத்தில் விதைகள்உதிர்வதைத் தடுக்கலாம்.
எக்டருக்குசராசரியான மானாவாரியில்400 முதல்500 கிலோவும்இறவையில்600 முதல்1200 கிலோவும் விளைச்சலாகஅறுவடை செய்யலாம்.நமதுசமையலில் கொத்தமல்லிமுக்கிய அங்கம்வகிப்பதால். இதற்குடிமாண்ட் அதிகம். அதனால் மிகஎளிதாக சந்தைகளில்கொத்தமல்லியை விற்பனைசெய்துவிடலாம். ஒருகட்டு கொத்தமல்லித்தழையை சராசரியாக 30 ரூபாய் வரைவிற்பனை செய்யலாம்.குறுகியகாலப் பயிர்என்பதால் சிறுமற்றும் குறுவிவசாயிகள் கொத்தமல்லியைபயிர் செய்வதுஅதிக லாபம்பெறலாம்.
0
Leave a Reply