சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் இன்று தகுதி சுற்றுகளுடன் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரேசிங் புரோமோட்டார்ஸ் என்ற தனியார் அமைப்பு இணைந்து பார்முலா 4 ரேஸ் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் கார் சாம்பியன் ஷிப் போட்டியின் முதல் சுற்று கடந்த 24, 25, ம் தேதிகளில் சென்னையை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடத்தின.
இரண்டாம் சுற்றுக்கான போட்டி நேற்று சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர்தூர சாலையில் இரவு நேர போட்டியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னையில் நடக்கும் கார் பந்தயம் உலக அளவில் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தை பெற்று தரப்போவது உறுதி என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply