25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பனிக்கட்டிகளாக மாறிய உறைந்த ஆறுகள் பனிப்பாறைகள் ஆகும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பனிக்கட்டிகளாக மாறிய உறைந்த ஆறுகள் பனிப்பாறைகள் ஆகும்.

பனிப்பாறைகள் என்பது பனிக்கட்டிகளாக மாறிய உறைந்த ஆறுகள் ஆகும். ஆண்டு முழுவதும் பனி ஒரே பகுதியில் இருக்கும் போது பனிப்பாறைகள் என்ற பெரிய அளவிலான திட வடிவ படிகமாக உருவாக தொடங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும், புதிய பனி அடுக்குகள் முந்தைய அடுக்குகளை புதைத்து சுருங்க வைக்கின்றன. சிறிய ஐஸ் துண்டுகள் போல உருவாகும் பனிப்பாறைகள் 100 ஆண்டுகளில் மலை போல் மிகப்பெரிய அளவை எட்டுகிறது.

பனிப்பாறைகள் அனைத்து வடிவங்களிலும், அளவிலும் காணப்படுகின்றன. ஐஸ்-க்யூப் அளவிலான துண்டுகள் முதல் ஒரு சிறிய நாட்டின் அளவிலான பனித்தீவுகள் வரை உள்ளன. பனிப்பாறை என்ற சொல் 16 அடி விட்டம் கொண்ட பெரிய பனித் துண்டுகளை குறிக்கிறது. பெர்கிபிட்ஸ் மற்றும் க்ரோலர்ஸ் என்று அழைக்கப்படும் சிறிய பனிப்பாறைகள், கப்பல்களுக்கு மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் நீரில் அமிழ்ந்து கிடக்கும் இவற்றை கண்டறிவது கடினம். வடக்கு அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிக் கண்டத்தை சுற்றியுள்ள குளிர்ந்த நீர்நிலைகளில் தான் பூமியில் உள்ள பெரும்பான்மையான பனிப்பாறைகள் காணப்படுகின்றன.

இந்த பனிப்பாறைகள் அதன் நீட்சியாக பனி படலங்களை தோற்றுவிக்கின்றன. பனிப்படலம் என்பது நிலத்தில் அமைந்து 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி காணப்படும் மிகப்பெரிய உறைபனி ஆகும். இப்போது பூமியில் இரண்டு பனிப்படலங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று உலகின் மிகப்பெரிய தீவானகிரீன்லாந்தின்பெரும்பகுதியைஉள்ளடக்கியது, மற்றொன்று அண்டார்டிக் கண்டம் முழுவதும் பரவியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News