விளையாட்டு போட்டிகள்.JUNE12TH
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி
நேற்று நடந்த கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கோவை, மதுரை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மதுரை அணி கேப்டன் சதுர்வேத் 'பவுலிங்' தேர்வு செய்தார். கோவை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது, மதுரை அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்து, இத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
டேபிள் டென்னிஸ்,
அல்டிமேட் டேபிள் டென்னிஸ்ஆமதாபாத்தில்(குஜராத்)6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் புனே, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் புனேயின் அனிர்பன் கோஷ், ஜெய்ப்பூரின் ஜீத் சந்திரா மோதினர். இதில் ஜீத் சந்திரா 21 என வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் பிரிட் ஏர் லேண்ட் (ஜெய்ப்பூர்) 2-1 என ரீத் ரிஷ்யாவை (புனே) தோற்கடித்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் ஜெய்ப்பூரின் பிரிட் ஏர்லேண்ட், ஜீத் சந்திரா ஜோடி 21 என புனேயின் ரீத் ரிஷ்யா. அல்வாரோ ரோபிள்ஸ், ஜோடியை வீழ்த்தியது.ஐந்து போட்டியில்,4ல் வென்ற ஜெய்ப்பூர் அணி 41 புள்ளிகளுடன்முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்து,. 2வது இடத்துக்கு முன்னேறியது.
உலக கோப்பை கால்பந்து போட்டி
உலக கோப்பை கால்பந்து 'பிபா' தொடர் அமெரிக்காவில்,2026, ஜூன் 11ஜூலை 19ல்.மொத்தம் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதன்,தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச்சுற்றில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும், முடிவில் பட்டியலில் 'டாப்-6' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
பிரேசிலின் சாவ் பாலோ நகரில் இதன் 16 வது சுற்று போட்டி நடந்தது. பிரேசில் அணி பராகுவேயை எதிர்கொண்டது. முதல் பாதி முடிவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன், பந்தை கொண்டு சென்ற மதியாஸ் குன்ஹா, பந்தை பராகுவே கோல் ஏரியாவுக்குள் அனுப்பினார். வினிசியஸ் ஜூனியர்,வலது காலால் பந்தை உதைத்து வலைக்குள் தள்ளி, கோலாக மாற்றினார்.இரண்டாவது பாதியில் இரு அணி தரப்பிலும் யாரும் கோல் அடிக்க வில்லை. முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஹாக்கி
வரும் டிச. 113ல் ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 11வது சீசன் சிலியில் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக பெல்ஜியம் சென்றுள்ள ஜூனியர் இந்திய பெண்கள் அணி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுடன் 5 போட்டிகளில் விளையாடுகிறது.பெல்ஜியத்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா, பெல்ஜியம் மீண்டும் மோதின. இந்திய அணி 2-1 என வெற்றி பெற்றது. விளையாட்டு போட்டிகள்.
0
Leave a Reply