ஜீன்-5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,10 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மூலம் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலமும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பசுமை விருதுநகர் இயக்கம் மூலமும் பல்வேறு கட்டங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, வருகின்ற ஜீன்-5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஜீன் மாதத்தில் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசு அலுவலர்கள், பொதுமக்கள், அமைப்புச்சாரா நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பள்ளிக், கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம்.
இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) 74026-08260 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.சமீப காலமாக புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் வறட்சியினை தடுப்பதற்கும் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையினை போக்குவதற்கும், மரம் நடுதல் ஒன்றே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்பதையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள், ஊடகவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இதை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டியதின் அவசியத்தை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது போன்று தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த சீரிய முயற்சியில் அனைவரும் தவறாது பங்கு கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து இந்த பூமியை அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்விடமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
0
Leave a Reply