காந்தி ஜெயந்தி தினமான 02.10.2024 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தினமான 02.10.2024 - அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
• கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். (01.04.2024 முதல் 30.09.2024 வரை)
• கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல்.(2023-2024).
• தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்.
• மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்து விவாதித்தல்.
• மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் குறித்து விவாதித்தல்.
• ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல்.
• இதர பொருட்கள் குறித்து விவாதித்தல்.
எனவே, 02.10.2024 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply