சென்னையில் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் துவங்கியது.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடத்தப்படுகிறது. இதன் இரண்டாவது சீசன், சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று துவங்கியது.
இந்தியா சார்பில் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் உட்பட 8 பேர் இதில் பங்கேற்கின்றனர். நேற்று முதல் சுற்று நடந்தன. அர்ஜூன் விதித் மோதினர். துவக்கத்தில் இருவரும் சம பலத்தில் விளையாடினர். 54 வது நகர்த்தலில் விதித் ஆதிக்கம் செலுத்தினார். இதில் இருந்து சாமர்த்தியமாக மீண்டு வந்த அர்ஜுன், 96 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply