கிராண்ட் பிரிக்ஸ் தடகளபோட்டி.
கிராண்ட் பிரிக்ஸ் தடகளபோட்டி ஹங்கேரியில், ஆண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் ஒலிம்பிக்கில் இரண்டு முறை(2020,2024) தங்கம் வென்ற சுவீடனின் டுப்ளான்டிஸ் 25,பங்கேற்றார். கடந்த ஜூன்மாதம் சொந்தமண்ணில் நடந்த போட்டியில் 6.28 மீ., உயரம் தாவி உலகசாதனை படைத்திருந்தார்.
நேற்று பைனலில் பங்கேற்ற டுப்ளான்டிஸ், அதி கபட்சமாக 6.29 மீ., உயரம் தாவி,13வதுமுறையாக தனது சொந்த உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்து புதிய உலக சாதனை படைத்தார்..
ஆண்களுக்கான 3000மீ., ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் பங்கேற்று,7 நிமிடம்,34.49 வினாடியில் வந்து 5வது இடம் பிடித்து, தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடந்த போட்டியில் இவர், 7 நிமிடம், 38.26 வினாடியில் கடந்து தேசிய சாதனை படைத்துள்ளார்.
0
Leave a Reply