மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (17.10.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர்.மாவட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை தலைமை அலுவலர்கள் தவறாது கலந்து கொண்டு மனுமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு கட்டாயம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.
வனவிலங்குகளால் பயிர் சேதம் அதிக அளவில் ஏற்படுவதை தடுக்க குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்குமாறும், பயிர்சேத நிவாரணத்திற்கு நடவடிக்கை எடுத்து பயிர் இழப்பீடு உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கவும், வனவிலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் மற்றும் கிராம அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதை மேல் நடவடிக்கை எடுக்கவும், பருத்தி விலை வீழ்ச்சியால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு பருத்திக்கு உரிய விலை கிடைக்கவும், பருத்தி காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா கொள்முதலுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும், தென்னை பயிருக்கு காப்பீடு கிடைக்க மேல் நடவடிக்கை எடுக்கவும், சேதம் அடைந்துள்ள உலர்களங்களை சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் சீரமைத்திடவும், மானியத்தில் சோலார் மின்வேலி வழங்கிடவும், சேத்தூரில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்கவும், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் சீரமைத்திடவும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.
சேதம் அடைந்துள்ள உலர்களங்களை சமூக பொறுப்புணர்வு நிதியில் சீரமைத்திடவும், அத்தி துண்டு முதல் கல்லுக் கட்டு ஊரணி வரை தார்ச்சாலை அமைக்க மேல் நடவடிக்கை எடுக்குமாறும், நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகளவில் திறக்க உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறும், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.மேலும், பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தவும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட திட்ட கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இக்கூட்டத்தில் துணை இயக்குநர்( மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) மரு.இரா.முருகன், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,), திருமதி அ.அம்சவேணி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி மு.சுமதி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply