கல்லீரல் மற்றும் உடலைச் சீராக்கும் இயற்கை பானம் .
கல்லீரல் மற்றும் உடலைச் சீராக்கும் இயற்கை பானம் (நெல்லிக்காய் + கருவேப்பிலை சாறு)
செய்முறை:
இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய்களைத் எடுத்து கொட்டைகளை நீக்கிக் கொள்ளவும்.
அதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
அரைத்த விழுதை வடிகட்டி, காலை உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் குடித்து வர வேண்டும்.
நன்மைகள்:
கல்லீரல் ஆரோக்கியம்: கல்லீரலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் (Fatty Liver) குறைக்க உதவுகிறது.
மஞ்சள் காமாலை: கல்லீரலைப் பலப்படுத்தி மஞ்சள் காமாலையைக் கட்டுக்குள் வைக்கிறது.
கண்பார்வை & முடி ஆரோக்கியம்: கண்பார்வை தெளிவாகும்; முடி உதிர்தல் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
உடல் எடை & ரத்த சுத்திகரிப்பு: ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி ரத்தத்தைச் சுத்தமாக்குவதுடன், உடல் எடையைக் குறைக்கவும் பித்த மயக்கத்தைத் தீர்க்கவும் துணைபுரிகிறது.
0
Leave a Reply