சத்தான உணவிற்கு கம்மங்கூழ் ஏற்றது.
கம்மங்கஞ்சி காலை மதிய உணவுக்கு ஏற்றதாகும்.இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். உடலை நோய் தாக்காமல் பாதுகாத்துகொள்ளும். கம்பு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு.இதில் கொழுப்பும் குறைவாக உள்ளது. இந்த கம்பங்கூழை குடித்து வந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய கூடும். உடல் எடையை குறைக்க விரும்பினால் தினசரி ஒரு வேளை கம்பு உள்ள உணவை எடுத்துகொள்வதன் மூலம் பலன் கிடைக்கும்.
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும் படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் புண் வயிற்றுப்புண் சரியாகும்.காலை உணவிலும் இதனை சேர்த்துக் கொண்டால் நீண்ட நேரத்துக்கு பசி இருக்காது.கஞ்சியுடன் தொட்டுக்கொள்ள மாங்காய் பச்சை மிளகாய் வெங்காயம் வத்தல் போன்றவற்றை செய்து கொண்டால் ருசி அள்ளும்.
கம்பு. மிக முக்கியமான உணவாக உள்ள இது கோடைமாதங்களில் கம்மங்கூழ் செய்வதற்கு மட்டுமே என்று இன்றைய தலைமுறையினர் நினைக்கிறார்கள். ஆனால் கம்பு எல்லா காலங்களிலும் சாப்பிட ஏற்றதே. கம்மஞ்சோறு, கம்மங்கூழ், கம்பு ரொட்டி, கம்பு தோசை, கம்பு இட்லி, கம்பு புட்டு, கம்பு கொழுகட்டை, கம்மங்களி, கம்பு பணியாரம் என்று எல்லா உணவுகளையும் ருசிபட தயாரிக்கலாம்.
0
Leave a Reply