25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்கான அடுத்த சுற்றில் இந்தியா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்கான அடுத்த சுற்றில் இந்தியா.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.

பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் 16-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. தொடர்ந்து இங்கிலாந்திடம் 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இதையடுத்து, மூன்றாவது லீக் ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 12-வது இடத்தில் உள்ள பாகிஸ்தானை எதிர்கொண்டது. அரையிறுதிக்கான அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியதுடன், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News